தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக பிப்ரவரி 2 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. பிற மாவட்டங்களில் வறண்ட நிலையே காணப்படும் என்றும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அதைபோல், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.