தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!
தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதைபோல் வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது பல இடங்களில் அதிகபட்சமாக 10 செ.மீ மலை பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி, பில்லிமலை எஸ்டேட் பகுதிகளில் 3.செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.