தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் பலத்த காற்று வீசும், மேலும் மத்திய மற்றும் தெற்கு வங்ககடல் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.