தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
காற்றின் சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
குமரி கடல் பகுதிகளில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.