மயிலாடுதுறை, நாகை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
மயிலாடுதுறை, நாகை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்கிறது.
இந்த சூழலில் வானிலை தொடர்பான செய்திகளை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக அறிவித்து வருகிறது. அதன்படி, அடுத்த 3 மணி நேரம் அதாவது 10 மணி வரை 3 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று முழுவதும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.