டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24.02.2023 முதல் 26.02.2023 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிககளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.