சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!
- தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.