தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழக்தின் நீலகிரி, கோவை, சேலம் வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2- ஆம் தேதி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களின் ஓரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 3,4 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக (கோவை) சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் 1 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.