அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
அடுத்த 48 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
அந்த வகையில் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
இந்நிலையில் மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் உட்பட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
மேலும் வருகின்ற இன்றுயிலிருந்து ஆகஸ்ட் 23 ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 60 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.