மக்களே …! 10 மணி வரை இந்த 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!
இரவு 10 மணி வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, தமிழகத்திற்கு மேலாக நிலவி வருகிறது. அதே நேரம் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வருகிறது. இந்த விளைவாக தமிழக்தில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இரவு 10 மணி வரையில் 7 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தென்காசி, கரூர் மற்றும் புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். அதே போல, திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மணி வரை லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.