தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு இந்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் சேலம், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.