குடை முக்கியம்..! காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில், சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய நாள் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி என 21 மாவட்டங்களுக்கு இன்று காலை 10 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் உருவாகி வலுவடைந்திருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த புதன்கிழமை புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையைக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 19, 2024