அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.
வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுவை ஆகிய 16 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைபொழிவு கரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025