அடுத்த 24 மணி நேரத்தில் 16 கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம், சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் திருவாரூர் நாகை தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை நெல்லை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது .
தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.