3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் செல்ல இருந்த இரண்டு விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரை இருந்த ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில் மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் பேசிய மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மழை பாதிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.