அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
13 மாவட்டங்களில் மழை:
இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்.10ம் தேதி வரை மழை:
மேலும், உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கின்ற்னர்.