அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
ஆந்திரா கடற்கரை மற்றும் அதையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், உட்பட 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது