தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், ஈரோடு ,நீலகிரி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025