தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Default Image

அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, கடந்த டிசம்பர் முதல் பனிக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் வட ம்மாற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

அந்தவகையில், கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேறுபாட்டால் இன்றும், மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2,3,5 ஆகியன தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். மார்ச்சு 4 மற்றும் 5ல் குமாரி கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்