தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு. மேலும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு.
மேலும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.