வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு.!
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு.