தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நாளை மறுநாள் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென் மாவட்டங்களில் இரண்டு நாளைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025