தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை மையம்..!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், திண்டுக்கல், நீலகிரி, தேனி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை கூடும் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் தேனி, கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24ஆம் தேதி திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அதைபோல் 25ஆம் தேதி கன்னியாகுமரி ,தேனி ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.