வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரா கடற்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மேலும் திருவண்ணாமலை,சேலம் ,வேலூர் நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ,ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.