தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!
அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், கடலூர் , மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.