தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் , அதை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி , காரைக்கால் ஆகிய பகுதியில்  மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்