#RainUpdate: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உட்பகுதி என் மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெட்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் குமரி ,நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி திண்டுக்கல்லில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 27,28-ஆம் தேதி மேற்கு மாவட்டங்கள், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மார்ச் 29ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025