தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு ..!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகதம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை கடலோர தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை மழைக்கு வாய்ப்பு என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழைபெய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.