தென்தமிழக கடலோர பகுதிகளில் மார்ச் 13 வரை மழைக்கு வாய்ப்பு..!!
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரி கடல் பகுதிகளில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மணிமுத்தாறு மற்றும் பாபநாசத்தில் தலா 2 செ.மீ மழையும், பேச்சிப்பாறை மற்றும் நாகர்கோவிலில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.