தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நாளை 13 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு ஆந்திரா மற்றும், தெற்கு ஓடிசா ஒட்டிய கடற்பகுதியில், நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நாளை 13 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை 13.07.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தேனி தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் 14.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும்.
15.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியதேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், தெரிவித்துள்ளது.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…