8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு., வானிலை மையம்..!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு எனவும் கேரளா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒன்பது கிலோமீட்டர் வேகத்திற்கு நிலவும் வலிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை, காரைக்காலில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை பெய்யும். வருகின்ற 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இதர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.