தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
எனவும், வருகின்ற மே 21-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.