வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம், தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளி மண்டல சுழற்சியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சியில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூரில் கனமழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். மே 23, 24, 25 இல் கடலோர மாவட்டங்கள் நீலகிரி, தேனி, ஈரோடு கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல அன்றைய தினம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…