இந்த 32 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! – வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, சேலம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, கடலூர், ஆகிய 26 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.