இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல கீழடுக்கு சுயற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல கீழடுக்கு சுயற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 24, 25, 26 ஆகிய நாட்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேலும், தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.