6 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சேலம், தருமபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.