டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு.
தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுபோன்று அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், நாளை 6 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.