தமிழகத்தில் இன்று விழுப்புரம்,புதுவை,காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில்= கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
இது தொடர்பாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் மணம்பூண்டி யில் 17 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் 16. செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த வருகின்ற 2 தினங்களில் தென் தமிழகம் மற்றும் வாகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழைபெய்யும், கனமழை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , சிவகங்கை, ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் 1 ம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்து உள்ள மழையின் அளவு 452 மில்லி மீட்டர், இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 419 மில்லிமீட்டர் இது இயல்பை விட 8 சதவிகிதம் அதிகம்” என்றும் தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…