தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Published by
பால முருகன்

வெப்பச்சலனம் காரணமாக தமிழக்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழக்தில் இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய -கன மழை பெய்யக்கூடம்.

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23-ஆம் தேதி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வேசானது. முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24-ஆம் தேதி விழுப்புரம். புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

25-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள். தென் மாவட்டங்கள், புதுவை . காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Recent Posts

DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…

DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…

டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…

36 minutes ago
RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

13 hours ago
ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

14 hours ago
RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்! RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்! 

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

15 hours ago
RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

17 hours ago
“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

17 hours ago