8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!

Default Image

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, விழுப்புரம், ராணிப்பேட்டை, விருதுநகர்,நெல்லை, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 சென்னையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிற நிலையில், அடுத்த  2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்