தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு எனவும், இன்று நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். இந்த கனமழை அடுத்த வரக்கூடிய இரண்டு நாட்கள் அதாவது 17, 18 தேதிகளில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
கேரளா கர்நாடகாவையொட்டியுள்ள கடற்பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். அடுத்த 5 நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.