தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, மற்றும் கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. தென்தமிழகம் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் கூறபடுகிறது.4
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று கூறபடுகிறது.
சேலம், கோவை, நீலகிரி, போன்ற மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025