தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர்,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுர், அரியலூர்,கடலூர்,தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நேரத்திற்கு வாணம் ஓரமேகமுட்டத்துடன் காணப்படும் நகரின் வ் இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 30, 2022