தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!
இன்று தமிழகம் முழுவதும், 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும், 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.