அடுத்த 48 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் திருவள்ளூர், சென்னை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது .
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.