13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், மற்றும் கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025