13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!
வெப்ப சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை அறிவிப்பு:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏன் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிபவத்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை:
அந்த வகையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வெயில்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 38 டிகிரி முதல் 40 டிகிரி வரை இருக்கும் என்றும் சென்னையில் 36 டிகிரி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.