தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது . தற்போது குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும், அதிலும் சென்னை, கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது. மேலும் இதில் 6 மாவட்டங்களில் பகல் 12 மணி வரை கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.