தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

- தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- லட்சத்தீவு மற்றும் கேரளா கடலோரா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இன்று தமிழகத்தில் விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு இந்த 10 மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.