நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு என்றும், தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் மின்னலுடன் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதைபோல் வருகின்ற 14ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும், 16ம் தேதி கோவை தேனி நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.